Friday, 31 December 2010

புத்தாண்டு புதிதாக வா

பொங்கும் இன்பம் எங்கும் பரவி
            தங்கும் நேரம்
விழியில் நனைந்து மொழியில் கலந்து
                  மகிழும் காலம்
உயிரில் உறைந்து உறவில் வளர்ந்து
                உலவும் வேளை
எங்களின் அன்பும் உங்களின் அன்பும்
                 சங்கமமாகி

பிறக்கட்டும் புத்தாண்டு
இறக்கட்டும் துன்பங்கள்
சிறக்கட்டும் இன்பங்கள்
திறக்கட்டும் பூரிப்பு
கறக்கட்டும் வெற்றிகளை
மறக்கட்டும் பழச்சோகம்
பறக்கட்டும் புது வேகம்

புத்தாண்டு புதிதாக வா
எல்லோர்க்கும் பொதுவாக வா

அக்கினி
ச.நித்தியராம்

Tuesday, 7 December 2010

கானல் நீர்

விடிகின்ற இரவும்
மடிகின்ற பகலும்
சந்திக்கும் வேளை

உடைகின்ற இதயம்
விடைகான முயலும்
பொன்னந்தி மாலை

வடிகின்ற அழகில்
முடிசூடா ராணி
திரிகின்ற சோலை

உலவும் மகளை
வலம் வந்து பார்த்தேன்
மலர் போலும் என்மங்கை இல்லை

ஓயும் பகலில்
பாயும் விழியில் கண்டது
தேயும் நிலவோ?

பின்தான் தெரிந்தது
அது நிலவும் இல்லை
நிலவின் நிழல் என்று!!


அக்கினி
ச. நித்தியராம்