ஒரு சினிமா விமர்சனம்
வித்தியாசமான சிந்தனை விபரீதமான எண்ணபடைப்புகள் கொண்ட தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலாவின் மற்றுமொரு படைப்பு அவன் - இவன் .
ஆனால் இம்முறை நகைச்சுவை மற்றும் பாசம் செண்டிமெண்ட் துணைகொண்டு விசால் என்ற நடிகனின் வித்தியாச ஆனால் பிரமிக்க வைக்கும் நடிப்பை மட்டும் நம்பி ஒருவரிக்கதையோடு பயணம் பண்ணி இருக்கிறார்.வழமையான வெட்டு குத்து இல்லை, ரத்தம் இல்லை. அருவருப்பு காட்சிகள் இல்லை, நிழல் உலகம் இல்லை, ஒரு ஜதார்த்த வாழ்வியலில் ஒரு அழகிய சினிமா அற்புத நடிப்பு.
மாறுபட்ட கதைக்களம், வித்தியாச திருப்பம், படம் நெடுக நகைச்சுவை, வழமையான பாலாவின் அல்லாத வித்தியாச கிளய்மக்ஸ், இப்படி படம் நெடுக நம்மை ஜோசிக்க வைத்த பாலா, ஆழமற்ற கதை, வலுவில்லா முதற்பகுதி இப்படியும் ஜோசிக்க வைத்துவிட்டார். படம் நெடுக நாம் தேடியது இளையராஜாவை, அவர் குரலில் ஒரு சோககீதம் இல்லை என்பது வருத்தம். யுவனின் இசை ஓகே ரகம் தான் ஆயினும் அவரால் இளையராஜா ஆக முடியாது என்பது இதில் உண்மை.
பாத்திரங்களின் நடிப்பு அற்புதம். விசால்( சிறந்த நடிகர்), ஆர்யா (சிறந்த துணை நடிகர்), அம்பிகா (சிறந்த துணை நடிகை) , ஜி எம் குமார் மற்றும் ஜனனியின் நடிப்பு அருமை, விருதுகள் நிச்சயம். படம் முடிந்து வெளியே வந்தாலும் கண்களில் நிற்பது ஜிஎம்கேயின் நடிப்பும் அவர் துணிந்து ஆடையின்றி நடித்ததும் தான். அந்த சின்ன பையனையும் மறக்க முடியாது. முழுக்க குடிக்காத மகனே, அம்மாவுக்கும் ஒரு கட்டிங் வையடா - அம்பிகா டாப் கிளாஸ் நடிப்பு, தியேட்டர் குலுங்கியது.
கவனிக்க வேண்டியது ஆதர் வில்சனின் ஒளிப்பதிவு, பின்னணி இசையில் இளையராஜா இல்லையே என்ற ஏக்கம். பாடல்கள் பரவாயில்லை.
காமடிக்காகவும், பாத்திரங்களின் நடிப்புக்காகவும் ஒருமுறை கட்டாயம் பார்க்கலாம்.
விசால் சுப்பர், பாலா ஓகே,
அவன் + இவன் சமன் எமன்!!
3.5/5
றாம் சந்திரலிங்கம்
No comments:
Post a Comment