நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா தட்டு தடுமாறி ஒருவழியாக 239 ஓட்டத்தை எட்டு விக்கட் இழப்பில் எடுத்தது. பெரேரா ஐந்து விக்கட் வீழ்த்தினார். அருமையாக பந்து வீசியும் முரளிக்கு அதிஷ்டம் இல்லை. அவருக்கு கிடைக்க வேண்டிய 3 விக்கட்டும் சகாக்களின் தவறால் நழுவிப்போனது. மைக்கல் ஹஸ்ஸி எதிர்கொண்ட முரளியின் முதல் பந்தை சங்ககாராவும் (catch & stump chance) டில்சானும் (slip catch) தவறவிட ஹஸ்ஸி இறுதியில் ஆட்டமிழக்காது 71 ஓட்டம் எடுத்தார். 60 000 இருக்கைகள் கொண்ட மெல்போர்ன் அரங்கு அரைவாசி கூட நிரம்பவில்லை. இருந்தும் கூச்சலும் சத்தமும் அரங்கை நிறைத்தது. எதோ இலங்கையில் நடப்பது போன்ற பிரமை. அவுஸ்திரேலிய ரசிகர்களை விட இலங்கை ரசிகர்களே அதிகம்.
240 என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இலங்கை ஆரம்பம் முதல் தடுமாறிகொண்டே இருந்தது. வீரர்கள் வருவதும் போவதுமாக இருந்தனர். சிலர் உடை அணிய எடுத்துக்கொண்ட நேரத்தை விட பிச்சில் நின்ற நேரம் குறைவு. ஒருகட்டத்தில் 8 for 107 என்ற இக்கட்டான நிலையில் இருக்க களமிறங்கினார் மலிங்க. 40/1 என்ற வெற்றி வாய்ப்பில் அவர் மத்தயுசுடன் இணைந்து ஆட தொடங்கினர். சிங்க வேட்டை ஆரம்பம் ஆனது.
இருவரும் நடத்திய அதிரடி ஆட்டம் அவுஸ்திரேலிய வீரர்களை மட்டுமல்ல ரசிகர்களையும் வியப்பில் ஆழ்த்தியது. இருவரும் அரை சதம் தாண்டி ஒன்பதாவது விக்கெட் ரன்ஸில் உலக சாதனையும் நிகழ்த்தி வெற்றிக்கு ஒரு ரன்னே தேவை என்ற நிலையில் மலிங்க ரன் அவுட் ஆனார். ஆட்டம் மேலும் சூடு பிடித்தது. இறுதி விக்கட், முரளி களம் இறங்கினர். ஒரு ரன் எடுத்தல் இலங்கை வெற்றி, ஒரு விக்கட் எடுத்தால் ஆட்டம் சமநிலை. இந்த நிலையில் எந்த கிரௌண்டில் 15 வருடத்திக்கு முன்பு நோ போல் சொல்லி பந்து வீச்சை தடை செய்ய முயன்றனரோ அதே மைதானத்தில் லாவகமாக பின்புறமாக பவுண்டரி அடித்து அற்புத வெற்றியை இலங்கைக்கு எடுத்தார் முரளி. சந்தோசம் ஆர்பாட்டம் மகிழ்ச்சியின் உச்சகட்டம் என அரங்கமே இலங்கை ரசிகர்களின் கையில்.
அவுஸ்திரேலிய அணிக்கு இது ஒன்பதாவது தொடர் தோல்வி. தொடர் வெற்றியில் சாதனை படைத்த அணி இன்று உலக கோப்பை நெருங்கும் வேளையில் தமது ஆட்ட திறனை பற்றி சிந்திக்க வேண்டிய நேரம். அவர்கள் சிலிர்த்து எழுவார்களா?
வெற்றி இலக்கை எட்டினாலும் இலங்கையின் துடுப்பாட்ட வீரர்கள் தமது திறனை மறு ஆய்வு செய்யவேண்டிய நிலை, இந்த வெற்றி தொடருமா, இலங்கை மட்டை வீச்சாளர்கள் தமது திறனை வெளிப்படுத்துவார்களா? அவுஸ்திரேலிய மண்ணில் முதல் தொடர் வெற்றியை ( series win ) இலங்கை பெறுமா? இதற்கு விடை காண வரும் வெள்ளி சிட்ன்யில் நடக்கும் இரண்டாவது ஒரு நாள் போட்டி வரை பொறுத்திருக்க வேண்டும்.
அக்கினி
ச. நித்தியராம்
Don't worry Australia will come back its just a hick up like every other team had in the past. Looking forward to Sydney ODI today anyways
ReplyDelete