Saturday, 6 November 2010

சென்றனர் வென்றனர்

சிங்கம் கங்காருவை வேட்டையாடுவது சாதாரண விடயம் காட்டில், ஆனால் இலங்கை சிங்கம் அவுஸ்திரலிய கங்காருவை வெல்வது (series win ) இதுதான் 26 வருட போராட்டத்தில் முதன் முறை. ஆம் சிட்னியில் நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியை மழைத் தடங்கல்களுக்கு இடையில் இலங்கை இலகுவாக வென்றது
என்றுதான் சொல்ல வேண்டும்.

Lasith Malinga grabs a stump as a souvenir after taking the last Australian wicket

இருந்தும் இது முடிவல்ல. உலக கிண்ணப் போட்டிகளுக்கு ஒரு ஆரம்ப வெற்றியாகத்தான் இதை இலங்கை வீரர்கள் எடுத்துகொள்ள வேண்டும்.
1996 உலக கிண்ணம் இலங்கை வெல்ல முன்னர் அவுஸ்திரலியாவில் களுவிதாரண மற்றும் ஜெயசூர்யா காட்டிய வான வேடிக்கை யாரும் மறக்க முடியாது. அதுபோல் இம்முறையும் சரித்திரம் மீள எழுதப்படுமா?  பொறுத்திருந்து பார்போம்.

    இந்தியா, இங்கிலாந்து, தென்னாபிரிக்கா ஆகிய அணிகள் ஒப்பீட்டு அளவில் திறமையில்  இலங்கைக்கு மேலேயே உள்ளனர். பாகிஸ்தான் பற்றி எதுவும் கூறமுடியாது உள்ளது. அடிவாங்கி உள்ளதால் அவுஸ்திரலிய அணி வீறு கொண்டு எழும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆக இந்த உலக கிண்ணம் ஒரு விறுவிறுப்பான ஒரு போட்டித்தொடராக அமையும்  என்பது மறுக்க முடியாதது.
2011 உலக கிண்ணம் யாருக்கு?
அணி அணியாக அடுத்த வாரம் முதல்
அதுவரை ..............
ச. நித்தியராம்
Muttiah Muralitharan celebrates yet another wicket

No comments:

Post a Comment