Monday, 15 November 2010

கண்மூடித்தனம்


கண்களை மூடிக்

காணும் கனவில் 

காதல் காட்சியில் 
நானும் நீயும்

தவறிலா உறவில் 
தளிர்த்திடும் நாம் 
தவறுகள் செய்வோம் 
தடைகள் இல்லை 

நேரிலே காண்போம் 
நிஜத்திலே நிகர் நிகர் 
நிற்போம் ஆனால் 
நித்திரையில் தான் உரையாடல்

வண்ணக் காதலை இன்னும் 
சொல்லவில்லை ஆயினும் 
வசந்தக் கனவில் 
வரையிலா உறவுகள் 

கட்டிலில் புரண்டு 
கண்களை மூடின் 
இமைஓரம் உன் 
இளமை உருவம் 

நிஜத்திற்கும் நினைவிற்கும் 
இடையில் 
ஓர் கந்தர்வ ராகம் 
நம் கண்களுகிடையில்

மௌன தேசத்தின் 
மந்திர வார்த்தைகள் நம் 
மனங்களுகிடையில் 
மகிழ்ச்சிப் போராட்டம் 

பொசுங்கும் கனவால் 
பொறி தட்டும் நினைவில் 
பொருமும் நான்

அரும்பும் புன்னகை 
ஆனந்த வெள்ளத்தில் 
அமைதியாய் நீ 

அக்கினி
ச நித்தியராம்
 


4 comments: