Thursday, 11 November 2010

அரகர வேலா அனுதினம் வா வா -----------காவடிச் சிந்து


வேலும் மயிலுடன் பக்கம் இருக்கிற 
வேலன் முருகனை கும்பிடுவோம் 
வடி வேலன் முருகனை கும்பிடுவோம்

நோய் விட்டு ஓடிட தொல்லைகள் நீங்கிட 
மாவிட்ட கந்தனை பாடிடுவோம் 
எங்கள் மாவிட்ட கந்தனை பாடிடுவோம் 

நாடு செழித்திட நாமும் வளம்பெற 
கேதீசன் மகனே வாருமையா 
திருக் கேதீசன் மகனே வாருமையா 

கதிர்காமத்துறையும் கந்தவேலாயுதா 
காக்க விரைந்து நீ ஓடி வா வா 
எமை காக்க விரைந்து நீ ஓடி வா வா 

இணுவையம்பதிஉறை கந்த சுவாமியே 
இன்னல்கள் நீக்கிட வந்திடுவாய் 
எம் இன்னல்கள் நீக்கிட வந்திடுவாய் 

காவடியாடியே கால்நடையாகவே 
காலடி நாடுவேன் கண்திறவாய் 
உன் காலடி நாடுவேன் கண்திறவாய் 

பாலும் பழமுடன் தேனும் கலந்திட்ட 
மாவும் பிசைந்துன்ன நான் தருவேன் 
தினை மாவும் பிசைந்துன்ன நான் தருவேன் 

பாலமுருகனே மாலின் மருகனே 
பாவம் பொடிபடச் செய்திடுவாய் 
எங்கள் பாவம் பொடிபடச் செய்திடுவாய் 

குதிரை முகந்தனை நீக்கிய வேலா 
குன்றில் அமர்ந்திடும் உமையவள் பாலா 
உயர் குன்றில் அமர்ந்திடும் உமையவள் பாலா 

வண்ண மயிலோனே வள்ளி மணாளனே 
வந்தனம் சொல்லியே வாழ்த்திடுவேன் 
உன்னை வந்தனம் சொல்லியே வாழ்த்திடுவேன்

எங்கள் மனத்துறை மாவையின் கந்தா 
அரகர வேலா அனுதினம் வா வா 
அரகர வேலா அனுதினம் வா வா 
அரகர வேலா அனுதினம் வா வா 

அக்கினி 
ச.நித்தியராம் 

No comments:

Post a Comment