பக்கத்தில் இருந்து
பக்குவமாய் பரிவு சொல்ல
அன்புள்ள ஆர்வத்தில்
ஆறுவது சினம் சொல்ல
கண்ணாலே மொழி பேசி
காதல் எனும் கதை சொல்ல
இரவு கண்ட கனவெல்லாம்
இதழோரம் சொல்ல
உள்ளத்து ஆசையெல்லாம்
உருக்கமாய் சொல்ல
நிலவொளியில் அமர்ந்திருந்து
நீண்ட நேரம் கதைக்க
மழைத்துளி சேர்த்து
மார்பெல்லாம் தெளிக்க
சின்ன கோபமூட்டி
சீறும் அழகு காண
வண்ண உடைகள் மாட்டி
வாலிபத்து எழில் காண
நாலு பொய் சொல்லி
நம்பும் விழிகள் காண
செல்லமாய் அழவைத்து
செப்பும் மொழிகள் காண
சித்திரச் சேலை கட்டி
சிங்கார நடை காண
கன நேரம் காக்கவைத்து
கக்கும் கோபம் காண
தினமும் பிந்தி வந்து
திட்டும் மொழி கேட்க
மடி மீது தலை சாய்த்து
மனம் விட்டு கதைக்க
அந்தரங்கம் பாக்க கேட்டு
அடிக்கும் கைகள் பாக்க
உரசல் இல்லா உறவு கொண்டு
விரசம் இல்லா வாழ்வு காண
மனக்குறை சொல்லி
மார்போடு அணைக்க
வண்ணம் கொண்ட பூமியில்
எண்ணம் போல் வாழ ?????????
அக்கினி
ச. நித்தியராம்
thought is "action in rehearsal"
ReplyDelete