Thursday, 4 November 2010

தீபாவளி

தரமான வாழ்வில் உரம் சேர்க்கும் வேளை
கரம் கோர்க்கும் நேரம் சரம் உதிரும் பூவாய்
சிரம் குனியும் தரம் கெட்ட வாழ்வாய்
தரணி விட்டோடி பரணியில் பரிதவித்து
மரமே தஞ்சமென்று வீதி வரபோரம் விதிஎன்று
வாழ்ந்து வரும் சுரம் கெட்ட சுருதி தமிழினம்

மஞ்சமதில் வீட்டிருந்த புகழ் விஞ்சு தமிழ் குடிமக்கள்
கொஞ்சு தமிழ் பேசும் பிஞ்சுக் குழந்தைக்கே
கஞ்சிக்கு கெஞ்சி நிற்கும் பரிதாபம்
நெஞ்சுக்கு சுமைதானே வஞ்சம் தான் யார் செய்தார்

மண் மீது பித்துடைய மாந்தர் சிலர் செயலால்
கண்ணீரில் வாழும் மக்களையும் மறந்து
பண்பட்ட பூமியை பார் போற்றும் பொன்னாட்டை
புண்பட்டு நோக வைத்து என்ன இன்பம் கண்டனரோ

குமிறும் அந்நியர் குண்டுத் தாக்குதல்
உமிழும் உயிரை உலை வைக்கும் உலகம்
அமிழும் இனமாய் ஆதரவு தேடும்
தமிழர்க்கு வேதனையா தமிழுக்கும் சோதனையா

இடம் விட்டு இடமோடி இடர் திர்ந்த பாடில்லை
மடம் விட்டு மடம் நாடி மார்க்கமும் தெரியவில்லை
குடம் தண்ணிக் கலைந்து குரங்கோடு வாழும் நாம்
சடம் போல நிற்கின்றோம் திடம் யார் தருவார்

பட்ட துயர் இனி மாறுமா அதை பச்சைக்கிளியது பாடுமா
வெட்ட வெளியிடை உடே ஒரு வெற்றி முரசொலி போடுமா
கட்டிக்கரும்பெனும் வாழ்க்கை என ன்னிக்குயிலது கூறுமா
திட்டமிட்ட  தீபாவளி  திருநாட்டில் வலம் வருமா

அக்கினி 
. நித்தியராம்

No comments:

Post a Comment