Saturday, 6 November 2010

விலை

கட்டுக் குலையாத கண் கவர் நடை
தட்டித் தடுமாறும் தாவணி இடை
கொட்டும் அழகில் மயங்குது படை
வெட்டும் விழிகளில் திறக்குது மடை

சுட்டும் விழிப் பார்வை ஒரு கொடை
மொட்டவிழ் வயதுக்கு ஏது தடை
பட்டு அணிந்து கவர்ச்சி படை
எட்டி நின்று கேட்பேன் தா ஒரு விடை

வட்டிக்கு வாங்கலாம் அவள் குடை
துட்டுக்கும் கேட்கலாம் அவள் சடை
எட்டியும் பார்க்கலாம் கண்ணின் கடை
பட்டதும் கேட்கலாம் நீ என்ன விலை


அக்கினி
ச. நித்தியராம் 

No comments:

Post a Comment