Thursday, 4 November 2010

விதியோடு விளையாடும் வீதியோர வித்தகர்கள்

வாழ்க்கைத் திரைப்படத்தில்
சந்தைக் காட்சியில்
சாலையோரம் வந்து போகும்
பாதசாரிகள் இவர்கள்
வருவதும் தெரியாது
போவதும் தெரியாது
வந்தாலும் புரியாது
இவர்கள்
காவிய நாயகர்கள்
அல்லவே
கடன் தீர்க்க வந்திருக்கும்
கலிகாலப் பிறவிகள்
இவருள் எழும்
தனி மனித உணர்ச்சிகள்
வித்தியாச கற்பனைகள்
விபரீத எண்ணங்கள்
விளக்க முடியாத செயல்கள்
குறுகிய வட்டத்தில்
குறுந் திரைப்படமாய்
அதில் அவர்கள் நாயகர்கள்
இருந்தாலும்
ஓரங்க உலக நடக்க மேடையில்
ஒட்டாமல் ஒதுங்கியே இருக்கும்
உதவாததகிவிடும்
உறவுக்கதைகள்
சேரவும் மாட்டாது
சேந்தாலும் தெரியாது
மழுங்கடிக்கும் திறமைகள்
மறந்து விடும் சாதனைகள்
இவர்கள்
இலைக்குள் மறைந்திருக்கும்
காய்கள் இல்லை
மறைத்து வைத்திருக்கும் மாயம்
ஒன்றல்ல இரண்டல்ல
ஓராயிரம் திறமைகள்
ஓரங்கட்டி
ஒதுங்கி பதுங்கி
வாழுது அங்கே
வறுமையும் வாட்டுது
விதியோடு விளையாடும் இந்த
வீதியோர வித்தகர்கள்
விலைமதிப்பட்ட
விரியங்கள்
புதைந்து கிடக்கும்
தத்துவச் செம்மணிகள்
தனி நிகர் மாந்தர்கள்
தான் தோன்றிய தரணியின்
மைந்தர்கள்
விதைக்க  நிலமில்லாது
வீதிஓரம் எறிந்துவிட்ட
வித்துக்கள்
பிரம்மன் படைப்பின்
கவலைஈனங்கள்.


அக்கினி 
ச.நித்தியராம் 

2 comments:

  1. a genuine thought of the unrealized & uncared street angels

    ReplyDelete
  2. 'amp'stands for..!?

    ReplyDelete